காளாத்தீஸ்வரர் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
ADDED :4996 days ago
உத்தமபாளையம் :உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 7 ல் திருத் தேரோட்டம் நடக்க உள்ளது. உத்தமபாளையத்தில் தென் காளகஸ்த்தி என்ற புகழ்பெற்ற காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை திருக்கோயில் உள்ளது. திருக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு சமுதாயத்தினருக்கான மண்டகப்படியாக தொடர்ந்து மார்ச் 6 வரையில் நடக்க உள்ளது. தினமும் சுவாமி-அம்மன் ஊர்வலம் நடந்து வருகிறது. பக்தர்களும், பொதுமக்களும், அனைத்து சமுதாயத்தினரும் பெருந்திரளாக பங்கேற்றனர். அனைத்து சமுதாய ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் ராஜேந்திரன், விழாக்குழுவினரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.