சாம்பவர்வடகரை ஐயப்பன் கோலில் 4ம் தேதி சரஸ்வதி ஹோமம்
கடையநல்லூர்:சாம்பவர்வடகரை சுவாமி ஐயப்பன் கோயிலில் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கான அன்னை சரஸ்வதி வழிபாடு ஹோமம் வரும் 4ம் தேதி நடக்கிறது.கடையநல்லூர் அருகே உள்ள சாம்பவர்வடகரை சுவாமி ஐயப்பன் கோயிலில் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. இதனையடுத்து வரும் 4ம் தேதி அன்னை சரஸ்வதி வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. காலை 6 மணிக்கு அன்னை சரஸ்வதி ஹோமம் மற்றும் வேள்வி வழிபாடு நடக்கிறது. ஹோமம் மற்றும் வேள்விகளை அன்னை அமிர்தானந்தமயி மடத்தை சேர்ந்த துறவியர்கள் நடத்துகின்றனர். மாலை 6 மணி வரை ஹோமம் நடக்கிறது. மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக நடக்கும் இந்த வேள்வியில் ஒவ்வொரு மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் புத்தகம் மற்றும் பேனாவை பூஜையில் வைத்து வழிபட்டு பின்னர் எடுத்து செல்லவும், மாணவ, மாணவியரே நேரடியாக வேள்வியில் நவதானியங்கள் போட்டு வழிபடவும் கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏற்பாடுகளை சுவாமி ஐயப்ப சேவா சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.