சேர்ந்தமரம் நீலகண்ட அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :4995 days ago
சேர்ந்தமரம்:சேர்ந்தமரம் நீலகண்ட அய்யனார், கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.சேர்ந்தமரம் நீலகண்ட அய்யனார், கருப்பசாமி கோவிலில் ஏழு ஊர் அருந்ததியர் சமுதாயம் சார்பில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து புனித நீர் அழைத்தல், சுவாமிகளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகள், நையாண்டி மேளம், வில்லிசை, சாமபூஜை, கிராமமக்கள் பொங்கலிடுதல், மஞ்சள் நீராட்டுவிழா, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை அருந்ததியர் சமுதாய நிர்வாகிகள் செய்திருந்தனர்.