பூவராகசுவாமி கோவிலில் இன்று மாசிமக கொடியேற்றம்
ADDED :4938 days ago
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் மாசி மக உற்சவத்தையொட்டி கொடியேற்றம் இன்று நடக்கிறது.ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் மாசி மக உற்சவம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.இந்த ஆண்டிற்கான மாசிமக உற்சவத்தையொட்டி கொடியேற்றம் இன்று காலை 11.15 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து தினமும் இரவு சுவாமி வீதியுலாவும், மார்ச் 2ம் தேதி தங்க கருடசேவை, 7ம் தேதி தீர்த்தவாரிக்காக கிள்ளைக்கு புறப்படும் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் தேவராஜ், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.