எனக்கு எதற்கு பணம்?
ADDED :2604 days ago
ஜூனைதுல் பக்தாதி என்ற ஞானி இருந்தார். பணத்தில் பற்று இல்லாத அவரிடம், சீடர் ஒருவர் 500 பொற் காசுகளைக் காணிக்கை அளிக்க வந்தார். “இவ்வளவு தான் இருக்கிறதா? இன்னும் இருக்கிறதா?”எனக் கேட்டார் ஞானி“நிறைய இருக்கிறது!” என்ற சீடரிடம், “ஒன்றுமில்லை. கையிலுள்ள பணம் போதுமா? இன்னும் தேவை இருக்கிறதா?” எனக் கேட்டார் ஞானி. “நான் இன்னும் பணம் சேர்க்க ஆசைப்படுகிறேன்” என்றார் சீடர். “அப்படியானால் நீங்களே பணத்தை வைத்திருங்கள். பணம் சேர்க்கும் எண்ணம் எனக்கில்லை” என்றார் ஞானி. இறைசிந்தனை கொண்டவர்கள், மனதை கடவுளிடம் அர்ப்பணிப்பதால் பணத்தேவை மிக குறைவாக இருக்கும்.