இடம் கொடுங்க!
ADDED :2539 days ago
ஒருமுறை கிராமவாசி ஒருவர் பள்ளிவாசலுக்கு வந்த போது நபிகள் நாயகம், சற்று விலகி உட்கார இடம் கொடுத்தார். அப்போது, கிராமவாசி, “நிறைய இடம் இருக்கிறதே! ஆனாலும் ஏன் அசைந்து கொடுத்தீர்கள்?” என்றார். “ஒருவர் சபையில் இருக்கும் போது மற்றவர்கள் வந்தால், அவருக்காக சற்று அசைந்து இடம் கொடுப்பது கடமை” என்றார். நிறைய இடமிருந்த நிலையிலும் கூட, ஒருவருக்கு இடமளித்த பண்பை பாருங்கள். ரயிலில் நால்வர் அமர இடமிருந்தாலும் சற்று ஒதுங்கி ஐந்தாவது நபருக்கு இடம் தரலாம். பேருந்துகளிலும் பெண்கள், முதியவர்களுக்கு இடம் தந்து இளைஞர்கள் நிற்கலாம்.