இடம் மாறிய இருதேவியர்
ADDED :2604 days ago
பெருமாளின் வலதுபுறம் ஸ்ரீதேவியும், இடதுபுறம் பூமிதேவியும் இருப்பர். ஆனால் இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயிலில், இடம் மாறி இருக்கின்றனர். இத்தலத்தில் நடந்த நிகழ்வே இதற்குக் காரணம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை கழுகு அரசனான ஜடாயு தடுத்தார். அவரைக் கொன்று விட்டு தப்பினான் ராவணன். ஜடாயுவைத் தன் தந்தையாக கருதிய ராமர், இத்தலத்தில் அவரது உடலுக்கு தீ மூட்டினார். வெப்பத்தை தாங்காத இருதேவியரும் இடம் மாறினர்.