காசி விஸ்வநாதர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி
ADDED :2450 days ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை காசி விஸ்வநாதர் கோவிலில், மூலவர் லிங்கம் மீது சூரிய ஒளிவிழும் நிகழ்வை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் காசி விஸ்வநாதர் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் வளர்பிறை விசாக தினத்தன்று, மூலவர் லிங்கதிருமேனி மீது, நேரடியாக சூரியஒளி கதிர்கள் விழும் அற்புத நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று வளர்பிறை விசாகம் நட்சத்திரத்தில் காலை 6.30 மணியளவில் மூலவர் காசி விஸ்வநாதர் லிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் அற்புத நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வு 15 நிமிடம் வரை நீடித்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.