ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் உண்டியல் திறப்பு
ADDED :2449 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் நேற்று உண்டியல் திறப்பு நடந்தது.இதில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ரேணுகாதேவி, தக்கார் சீனுவாசன்,செயல் அலுவலர் மதனா உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் கோவில் வளாகத்தில் ஆறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டது. தொடர்ந்து உண்டியலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் எண்ணி கணக்கிடப்பட்டது. இதில் ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ. கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகள் கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர். உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை 12 லட்சத்து 13 ஆயிரத்து 763 ரூபாய் இருந்தது.மேலும் பவுன் நகை 62 கிராமும், வெள்ளி பொருட்கள் 230 கிராம் இருந்தது.