உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.11 கோடி உண்டியல் காணிக்கை

அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.11 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்வர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, மாசி மாத பவுர்ணமி முடிந்து நேற்று (பிப்., 26ல்) உண்டியல் எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள், ஒரு கோடியே, 11 லட்சத்து, 81 ஆயிரத்து, 18 ரூபாய், 417 கிராம் தங்கம், 1,090 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !