குமாரபாளையத்தில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :2450 days ago
குமாரபாளையம்: தேய்பிறை அஷ்டமியையொட்டி, குமாரபாளையத்தில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காசிவிஸ்வேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பக்தர்களின் பக்தி பாடல் பஜனை நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவில், வரசித்தி விநாயகர் கோவில், வளையக்காரனூர் கள்ளிப்பாளையம் சிவன் கோவில், உள்ளிட்ட கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.