சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா துவக்கம்
ADDED :2447 days ago
சிதம்பரம்: சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா, இன்று (பிப்.,28) துவங்குகிறது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், சிவராத்திரியை முன்னிட்டு, 38ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, இன்று (பிப்.,28) மாலை துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது.
துவக்க விழாவில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர், டாக்டர் முத்துக்குமரன் தலைமை தாங்குகிறார். நாட்டியாஞ்சலியை, என்.எல்.சி., சேர்மன் ராகேஷ்குமார் துவக்கி வைக்கிறார்.முதல் நிகழ்ச்சியாக, பெங்களூரு ஸ்கந்த நாட்டியாலயா மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நான்கு நாட்களில், பரதம், குச்சிப்புடி, கதக், ஒடிசி போன்ற பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.