உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமாண்டர் அபிநந்தன் நாடு திரும்ப கோவிலில் வழிபாடு

கமாண்டர் அபிநந்தன் நாடு திரும்ப கோவிலில் வழிபாடு

திருப்பூர்: பாக்., பிடியில் சிக்கியுள்ள நம் விமானப்படை வீரர் அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டி, ஆயுஷ்ய ஹோமம் திருப்பூரில் நடத்தப்பட்டது.நம் நாட்டின் விமான படை கமாண்டர் அபிநந்தன், நேற்று முன்தினம் பாக்., ராணுவத்தினர் பிடியில் சிக்கினார். இவர் பத்திரமாக தாயகம் திரும்ப மத்திய அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள, ஐயப்பன் கோவிலில் நேற்று காலை, 6:00 முதல், 7:00 மணி வரை அபிநந்தன் பத்திரமாக, நல்ல ஆரோக்கியத்துடன் நாடு திரும்ப வேண்டி ஆயுஷ்ய ஹோமம் நடத்தப்பட்டது.இதில், ஐயப்ப பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும், அவர் பெயருக்கு சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது.

பல்லடம் ஸ்ரீவிநாயகர் சாயிபாபா கோவிலில், அபிநந்தன் நாடு திரும்ப சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக, சாயிபாபா முன், அபிநந்தன் படம் வைத்து பூஜிக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என, அனைவரும், 108 முறை மந்திரம் கூறி, அவர் நாடு திரும்ப சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !