பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு: புத்தகம் வெளியிடு
ADDED :2448 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் மூணாறு பொன்முருகன் சேவா சங்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலர் வழிபாடு நடத்தி, ஆன்மிகத் தளிர் புத்தகம் வெளியிட்டுள்ளனர். கேரள மாநிலம் மூணாறைச் சேர்ந்த பொன் முருகன் சேவா சங்கத்தினர் கடந்த 1982 முதல் ஆண்டுகளாக பழநிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர்.
இந்தாண்டு நேற்று (பிப்., 28ல்) குருசாமி எம்.எஸ்.சாமி தலைமையில் மூணாறில் இருந்து மறையூர், மானுப்பட்டி வழியாக 3 நாட்களாக நடந்து பழநி வந்தனர். பழநி சித்தநாதன் மண்டபத்தில் ஆன்மிகத்தளிர் புத்தகத்தை குருசாமி எம்.எஸ்.சாமி, நிர்வாகி செல்வம் வெளியிட சீனிவாசன் பெற்றுக்கொண்டார். சங்க நிர்வாகிகள் குட்டியாபிள்ளை, சதீஸ்குமார் உடனிருந்தனர். மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையில் முருகனை தரிசனம் செய்தனர்.