கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூல நட்சத்திர பூஜை
ADDED :2614 days ago
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூல நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், நந்தி, உற்ஸவருக்கு, 30 வகை திரவிய அபிஷேகம் நடந்தது.
விசேஷ மலர் அலங்காரத்துடன் உற்சவர் பிரகார வலம், திருவாசக பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. செம்பட்டி கோதண்டராமர் கோயில், அம்பாத்துரை மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூல நட்சத்திர சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.