அந்தியூர் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நிறைவு
ADDED :2449 days ago
அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள கூத்தம்பூண்டியில் உள்ள, மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த மாதம், 14ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பொங்கல் விழா, நேற்று முன்தினம் (பிப்., 27ல்) வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆப்பக்கூடல், புதுப்பாளையம், அந்தியூர், கவுந்தப்பாடி சுற்று வட்டாரப்பகுதி மக்கள், கலந்து கொண்டனர். மஞ்சள் நீராட்டுடன், விழா நேற்று (பிப்., 28ல்) நிறைவடைந்தது.