உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆன்மிக ஜோதிக்கு வரவேற்பு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆன்மிக ஜோதிக்கு வரவேற்பு

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆன்மிக ஜோதிகளுக்கு, நேற்று (பிப்., 28ல்), வரவேற்பு விழா நடைபெற்றது.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட, பங்காரு அடிகளாரின், 79வது பிறந்தநாள் விழா, வரும், 3ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, பிப்ரவரி, 8ம் தேதி, நெல்லை மாவட்டத்தில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவரும், இளைஞர் அணி தலைவருமான, செந்தில்குமார், ஆன்மிக ஜோதியை துவக்கி வைத்தார்.

இந்த ஜோதி, தமிழகத்தின் கிராமங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதியாக, நேற்று (பிப்., 28ல்) மாலை, 3:00 மணிக்கு, மேல்மருவத்தூர் சித்தர் பீடம் வந்தடைந்தது. இயக்க துணைத்தலைவர், செந்தில்குமார், ஜோதிகளுக்கு வரவேற்பு அளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !