உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உன்னால் முடியும் தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!!!

உன்னால் முடியும் தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!!!

* யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். உழைப்பின் மூலம் சொந்தக் காலில் நிற்கப் பழகுங்கள்.      
* பிறர் குற்றம் சொல்லும் விதத்தில் நடக்காதீர்கள். கடமையைக் கண்ணாக மதியுங்கள்.      
* கற்ற நல்ல விஷயங்களை வாழ்வில் கடைபிடிப்பவனே அறிவாளி.      
* செல்வமும் ஆயுளும் தாமரை இலை தண்ணீர் போல, நம்மை விட்டு ஓடி விடும்.      
* போதும் என்ற எண்ணம் இல்லாதவன் எதையோ இழந்தவன் போல அலைந்து கொண்டிருப்பான்.      
* மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதனே மாவீரன். சோம்பலை விட்டு விலகியவனே மகாசூரன்.      
* மனிதன் பழி பாவத்திற்கு அஞ்சி நடக்க வேண்டும். குற்றமில்லாத வாழ்வே உயர்வுக்கு வழிவகுக்கும்.      
* தூக்கத்தில் இருந்து எழுவதை விட, அறியாமை என்னும் தூக்கத்தில் இருந்து எழுவது அவசியம்.      
* நல்லவர் நட்பால்,  எல்லா நன்மைகளையும் அடையலாம். - தைரியமூட்டுகிறார் ஜெயேந்திரர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !