உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா

அன்னூர் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா

அன்னூர்: அன்னூர், கோவில்பாளையம் கோவில்களில் மகா சிவராத்திரி விழா இன்று (மார்ச்., 4ல்) நடக்கிறது.

பிரசித்தி பெற்ற அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், 43ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நடக்கிறது. இன்று மார்ச்., 4ல் இரவு 7:00 மணிக்கு முதற்கால அபிஷேக ஆராதனை துவங்கு கிறது. 7:00 மணிக்கு குழந்தைகளின் பரத நாட்டியம் நடக்கிறது.

அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை இரவு 9:00 மணிக்கு துவங்கி, விடிய விடிய நடக்கிறது. பாடல் பெற்ற தலமான, கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (மார்ச்., 4ல்) மாலை 6:00 மணிக்கு ருத்ர வேள்வி பூஜை நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு முதற்கால பூஜை நடக்கிறது. நள்ளிரவு 1:00 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. மறுநாள் அதிகாலை வரை நான்கு கால பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !