உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை ஆதிகாளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி கொடை விழா

சென்னை ஆதிகாளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி கொடை விழா

சென்னை: பள்ளிக்கரணை ஆதிகாளியம்மன் கோவிலில், மகா சிவராத்திரி கொடை விழா, இன்று (மார்ச்., 4ல்) துவங்குகிறது.

பள்ளிக்கரணை, அண்ணா, எம்.ஜி.ஆர்.நகரில் அமைந்துள்ள, ஆதிகாளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா, ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 29ம் ஆண்டு மகா சிவராத்திரி கொடை விழா, இன்று (மார்ச்., 4ல்) முதல், முன்று நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இன்று (மார்ச்., 4ல்)காலை, 6:30 மணிக்கு, காளி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடக்கின்றன.

அதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் வைபவம் நடக்கிறது.நாளை  (மார்ச்., 5ல்) மாலை, 5:00 மணிக்கு, பால்குடம் எடுத்தல் நடக்கிறது. இரவு, சுடலைமாட சுவாமி கொடை விழாவும் நடக்கிறது. நாளை மறுநாள் (மார்ச்., 6ல்)மதியம், 12:00 மணிக்கு, மயானக் கொள்ளையும், மாலை, 6:00 மணிக்கு, பூக்குழி இறங்குதல் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு, கும்பம் களைதலுடன், விழா நிறைவு பெறுகிறது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி,விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !