கிணத்துக்கடவு அய்யாசாமி கோவில் குண்டம் திருவிழா
கிணத்துக்கடவு: சிக்கலாம்பாளையம், அய்யாசாமிகோவில் குண்டம் திருவிழா மகா சிவராத்திரி பள்ளய பூஜையுடன் இன்று (மார்ச்., 4ல்)துவங்குகிறது.
கிணத்துக்கடவு அடுத்த, சிக்கலாம்பாளையத்தில், கருமலை அய்யாசாமி, பத்ரகாளியம்மன் குண்டத்து காளியம்மன் கோவில், அமைந்துள்ளது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழாவும், குண்டம் இறங்குதல் நிகழ்வும் நடக்கிறது. ஏராளான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்கி வேண்டுதலை நிறை வேற்றுகின்றனர். இன்று (மார்ச்., 4ல்) இரவு, மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, பள்ளய பூஜை நடக்கிறது. நாளை (மார்ச்., 5ல்) காலை, 6:00 மணிக்கு குண்டம் திறக்கப்படுகிறது.
அம்மன் அழைப்பை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு குண்டத்துக்கு பூப்போடுதல் நிகழ்ச்சியும், இரவு,10:00 மணிக்கு, ஆற்றில் இருந்து, சக்திகும்பம் அழைத்தலும் நடக்கிறது. நாளை மறுநாள், 6ம் தேதி காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது.
குண்டம் திருவிழா ஏற்பாடுகளை விழா குழுவினரும், பொதுமக்களும் மேற்கொண்டுள்ளனர். மகாசிவராத்திரி விழாவடசித்தூர் பிளேக் மாரியம்மன் கோவிலில்,41ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா இன்று (மார்ச்., 4ல்) நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இரவு, 8:30 மணிக்கு மகா கணபதி பூஜையும், அம்மன் பூஜையுடன் நாம கீர்த்தனை தொடர்ந்து நடக்கிறது.
ஜெகநாதசுவாமிகள் முன்னிலையில், 108 தீர்த்தக்குட பூஜை, திருவிளக்கு பூஜை, அம்மன் அலங்கார பூஜையும் நடக்கிறது. இரவு, 11:00 மணிக்கு சிறப்பு பக்தி சொற்பொழிவும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (மார்ச்., 6ல்) மாலை, 5:30 மணிக்கு பால் அபிஷேக ஆராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது.