உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பமேளா நிறைவு: 80 லட்சம் பேர் புனித நீராடல்

கும்பமேளா நிறைவு: 80 லட்சம் பேர் புனித நீராடல்

 பிரயாக்ராஜ், உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், கும்பமேளாவின் இறுதி நாளான நேற்று மட்டும், 80 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள அலகாபாத் எனப்படும், பிரயாக்ராஜில், கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் கூறப்படும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், கும்பமேளா நடக்கிறது. ஜன., 15ல், மகர சங்கராந்தியன்று துவங்கிய கும்பமேளா, மகா சிவராத்திரி தினமான நேற்றுடன் முடிவடைந்தது. 55 நாட்கள் நடந்த கும்பமேளாவில், நாடு முழுவதிலும் இருந்து, 22 கோடி பேர் புனித நீராடினர். புனித நீராட வந்த பக்தர்களின் பாதுகாப்புக்காக, போலீசாருடன், மத்திய ரிசர்வ் படையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நேற்று அதிகாலை முதல், ஆயிரக்கணக்கான பக்தர்களும், துறவியரும், புனித நீராடுவதற்காக, ஹர ஹர மஹாதேவ என்ற கோஷத்துடன், திரிவேணி சங்கமத்தை நோக்கி, அலை அலையாக திரண்டு வந்தனர். நேற்று மட்டும், 80 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக, உ.பி., அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !