உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதார்நாத் கோவில் மே, 9ல் மீண்டும் திறப்பு

கேதார்நாத் கோவில் மே, 9ல் மீண்டும் திறப்பு

டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை, மே 9ல், மீண்டும் திறக்கப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இமயமலை பகுதியில், பிரசித்தி பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து, தரிசனம் செய்து செல்வர். குளிர் காலங்கள் தவிர, மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டுமே இந்த கோவில் நடை திறந்திருக்கும். இந்நிலையில், குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், கேதார்நாத் கோவில் நடை, வரும் மே, 9ல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !