உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிவராத்திரி பூஜை

பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிவராத்திரி பூஜை

திருவாரூர்: விளமல், பதஞ்சலி மனோகரர் கோயிலில் மகா சிவராத்திரி பூஜை நேற்று சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு  பதஞ்சலி மனோகரர் சுவாமிக்கு மஞ்சள், திருமஞ்சனம்,  அரிசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர்,  கரும்பு சாறு, சந்தனப்பொடி, திருநீர்,  மற்றும் ஸ்வர்ணம் அபிஷேகம் நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !