பஞ்சாட்சர ஜபம், சிவராத்திரி: நாமக்கல்லில் கோலாகலம்
நாமக்கல்: திண்டமங்கலத்தில், பஞ்சாட்சர ஜபம் மற்றும் சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. நாமக்கல் அடுத்த திண்ட மங்கலம், சிவகாமி அம்பாள் சமேத தேனீஸ்வரர் சுவாமி கோவிலில், சிவராத்திரி விழா நடந்தது. நேற்று (மார்ச்., 4ல்) காலை, 7:00 மணிக்கு மகா கணபதி வழிபாடு, புண்யாகம், சங்கல்பம், பஞ்சாட்சர ஜபம். மாலை, 6:00 மணிக்கு, 108 சிவலிங்க பூஜை, இரவு, 7:00 மணிக்கு முதல் கால பூஜை, 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடந்தது. விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (மார்ச்., 5ல்) அதிகாலை, 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, காலை, 5:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது.
* நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று (மார்ச்., 4ல்) இரவு, 7:30 மணிக்கு முதல் கால பூஜை, இரவு, 10:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடந்தது. இன்று (மார்ச்., 4ல்) அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.