உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரசங்கால் மல்லீஸ்வரர் கோவிலில், 10,008 தீபம் ஏற்றி வழிபாடு

கரசங்கால் மல்லீஸ்வரர் கோவிலில், 10,008 தீபம் ஏற்றி வழிபாடு

கரசங்கால்: கரசங்கால் மல்லீஸ்வரர் கோவிலில், 10 ஆயிரத்து எட்டு தீபங்கள் ஏற்றி, மஹா சிவராத்திரி விழா, நேற்று (மார்ச்., 4ல்)கொண்டாடப்பட்டது.படப்பை அடுத்த கரசங்காலில், பழமைவாய்ந்த மரகதாம்பிகை உடனுறை மல்லீஸ்வரர் கோவில் உள்ளது.

இங்கு, மஹா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று (மார்ச்., 4ல்), ஓம் நமச்சிவாய, சிவலிங்கம் உள்ளிட்ட வடிவங்களில், 10 ஆயிரத்து எட்டு அகல் தீபங்கள் ஏற்றப்பட்டன. நான்கு கால சிறப்பு பூஜைகளுடன், சிறப்பு வழிபாடு நடந்தன.மேலும், 108 பால்திருமுழுக்கு, பஞ்சாமிர்த திருமுழுக்கு, 108 இளநீர் திருமுழுக்கு நடைபெற்றது.

கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் என, இரவு முழுவதும், மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !