திருத்தணி லிங்கேஸ்வரர் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED :2448 days ago
திருத்தணி: திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று (மார்ச்., 4ல்), மஹா சிவராத்திரியையொட்டி, மூலவருக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.நேற்று (மார்ச்., 4ல்), காலை, 9:30 மணிக்கு, பெரிய தெருவில் விநாயகர் கோவிலில் இருந்து, 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டது.
பெண் மற்றும் ஆண் பக்தர்கள் பால்குடம் தலைமையில் சுமந்தவாறு, சந்து தெரு, மேட்டுத் தெரு வழியாக சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலை அடைந்தது. மதியம், 12:00 மணிக்கு, மூலவருக்கு, 108 பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.