உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

மாசி மாதம் வரும் மஹா சிவராத்திரி, சிவ பக்தர்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்று. இதையொட்டி, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள சிவன் கோவில்களில், சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்தன.

கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொம்மி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவிலில், நேற்று (மார்ச்., 4ல்), மாலை, 41 அடி ராஜலிங்கத்திற்கு, 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நேற்று (மார்ச்., 4ல்), நான்கு காலபூஜைகள் மற்றும், 1,008 சங்காபிஷேகம் நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா சென்றார்.சிவராத்திரியை முன்னிட்டு, இரவு முழுவதும் கோவில்களின் நடை திறந்திருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, மூலவரை வழிபட்டனர்.

லட்சம் தேங்காய்களால் சிவலிங்கம்நகரி அடுத்த, கீளப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள, சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், நேற்று, மஹா சிவராத்திரியையொட்டி, கோவில் அருகே, ஒரு லட்சம் தேங்காய்களால், 100 அடி உயரத்திற்கு, சிவலிங்கம் அமைக்கப்பட்டது. சிவலிங்கத்திற்கு, சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்கள் வழிபட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !