ஆனைமலை திரவுபதியம்மன் திருவிழா கொடியேற்றம்
ADDED :2449 days ago
ஆனைமலை:ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று (மார்ச்., 5ல்), கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஆனைமலையில் மிகவும் பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.இன்று, 5ம் தேதி கொடியேற்றத்துடன், குண்டம் திருவிழா துவங்குகிறது. வரும், 17ம் தேதி திருமஞ்சனம், சாமி புறப்பாடு, 20ம் தேதி அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம் நடக்கிறது.வரும், 21ம் தேதி காலை குண்டம் கட்டுதல், அலங்காரத் தேர் வடம் பிடித்தல் இரவு, குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 22ம் தேதி காலை, குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, குண்டத்தில் பக்தர்கள் பூ இறங்குதல், திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது.