பெ.நா.பாளையம் சிவராத்திரி கோலாகலம் ஆணி செருப்புடன் ஊர்வலம்
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூரில் இன்று (மார்ச்.,5ல்) காலை சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆணிக்கால் செருப்புடன் பூசாரி ஊர்வலமாக வரும் நிகழ்வு நடக்கிறது.
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூரில் மகாலட்சுமி, வேட்டைக்காரசாமி, வீரபத்திரசுவாமி தொட்டம்மாள் திருக்கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் இக்கோவில் களில் சிவராத்திரி விழா விமரிசையாக நடக்கும். வழக்கம்போல, இந்தாண்டும், சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.பூச்சியூரில் கோவில் மைதானத்தில் மூன்றுசுவாமிகளுக்கான பூஜைகள் நடக்கின்றன. இன்று (மார்ச்., 4ல்) காலை, 6:00 மணிக்கு, மகாலட்சுமி சுவாமி ஊர்வலம் நடக்கிறது. இதை தொடர்ந்து வேட்டைக்காரசுவாமி ஊர்வலம் நடக்கிறது.
தொடர்ந்து பூசாரி, ஆணிக்கால் செருப்பு அணிந்து தரையில் நடந்து வருகிறார். தொடர்ந்து, வேட்டைக்காரசாமி மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்றவதாக, வீரபத்திரசாமி தொட்டம்மாள் ஊர்வலம் நடக்கிறது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.