உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் திருப்பணி வரும் 24ல் கும்பாபிஷேகம்

கோவில்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் திருப்பணி வரும் 24ல் கும்பாபிஷேகம்

கோவில்பாளையம்:கோவில்பாளையத்தில், பழமையான சக்தி மாரியம்மன் கோவில் திருப்பணி முடியும் நிலையில் உள்ளது. வரும், 24ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

பாடல் பெற்ற தலமான, காலகாலேஸ்வரர் கோவில், வீரமாட்சியம்மன் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில் என ஏராளமான கோவில்கள் உள்ளதால், இவ்வூர், கோவில்பாளையம் என பெயர் பெற்றுள்ளது.

இங்கு, 100 ஆண்டுகள் பழமையான சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.விநாயகர், துர்க்கை, முருகன், நவகிரகம் ஆகியவற்றுக்கு புதிதாக சன்னதி அமைத்து, மண்டபம் ஏற்படுத்தி, கர்ப்பக்கிரக கதவுகளுக்கு, தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பதித்து, திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும் 23ம் தேதி துவங்குகிறது. அன்று, மாலையில் திருவிளக்கு வழிபாடு, முதற்காலை வேள்வி பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 24ம் தேதி அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி நடக்கிறது.காலை 7:30 மணிக்கு, விமானங்கள் மற்றும் மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அச்சம்பாளையம் குழுவின் பஜனை நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !