உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் சவுடேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி விழா

அன்னூர் சவுடேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி விழா

அன்னூர்:வடுகபாளையம், சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாரணாபுரம் ஊராட்சி, வடுகபாளையம், சவுடேஸ்வரி அம்மன் கோவில் சிவராத்திரி விழா பிரசித்தி பெற்றது. நேற்று (மார்ச்., 4ல்) கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டது. மாலையில், மகா முனி அய்யன்களுக்கு படையல் பூஜை செய்யப்பட்டது. விநாயகர் கோவிலிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து இருகூர் குழுவின் பம்பை நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேறனர்.இன்று (மார்ச்., 5ல்) பள்ளய பூஜை, அபிஷேக, அலங்கார பூஜை, பொங்கல் வைத்தல் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக, குரும்பபாளையத்தில் இருந்து கோவிலுக்கு வேன் வசதி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !