உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை

திருப்பரங்குன்றம் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு விடிய, விடிய சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தன.

சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளிய சத்திய கிரீஸ்வரருக்கு மாலை 5:30 முதல் இரவு 12:30 மணி வரை நான்கு கால பூஜை, அபிஷேகங்கள் நடந்தன. மலைக்குப்பின்புறம் எழுந்தருளியுள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு ஐந்து கால பூஜைகள் முடிந்து ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு இரண்டு காலை யாக பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன.மலை மீதுள்ள காசி விஸ்வநாதர், கீழ ரத வீதியில் எழுந்தருளிய அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமிக்கு இரண்டு கால அபிஷேகம், பூஜை நடந்தது. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சிக்கு அபிஷேகம், பூஜை நடந்தன.

* திருநகர்: சித்தி விநாயகர் கோயில் காசி விஸ்வநாதருக்கு ஐந்து கால பூஜை நடந்தது.

* உசிலம்பட்டி: ஆனையூர் மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஷ்வரர், திடியன் பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசிப்பச்சை திருவிழாவிற்காக உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் உள்ள அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் நேற்று (மார்ச்., 4ல்) காலை சிறப்பு பூஜைகளுக்குப் பின் பூஜாரிகள், பக்தர்கள் படைசூழ எடுத்துச் செல்லப்பட்டன. பாதயாத்திரையாக கொண்டு செல்லப்பட்டு இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன. குல தெய்வ கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜை நடந்தது.

* மேலூர்: அரிட்டாபட்டி பாண்டியர் குடைவரை சிவன் கோயில் விழாவில் மேலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். சிறப்பு
அபிஷேகம், ஆராதனை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அரிட்டாபட்டி ஏழு மலை பாதுகாப்பு சங்கம் மற்றும் கிராமத்தினர் செய்தனர். மேலூர், திருவாதவூர், திருச்சுனை கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !