உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா: மார்ச் 12ல் கொடியேற்றம்

திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா: மார்ச் 12ல் கொடியேற்றம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 12 கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா துவங்கும் வகையில் மார்ச் 11 கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளிய அனுக்ஞை விநாயகர் முன் அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜை நடக்கும். மார்ச் 12 காலை 10:45 முதல் காலை 11:45 மணிக்குள் ரிஷப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

திருக்கல்யாணம்: விழா நாட்களில் மார்ச் 12 முதல் 25 வரை தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கும். விழா முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 23 நடக்கிறது. மார்ச் 24 தேரோட்டம், 25ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !