பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்ச் 21ல் பங்குனி திருக்கல்யாணம்
ADDED :2451 days ago
பரமக்குடி:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பங்குனிதிருக்கல்யாண விழா மார்ச் 20ல்இரவு அனுக்ஞையுடன் துவங்கவுள்ளது.
மறுநாள் (மார்ச் 21) காலை சுந்தரராஜபெருமாள் மாப்பிள்ளை திருக்கோலத்துடன் ஆடிவீதிகளில் வலம் வருவார். தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் பெருமாள் -சவுந்தரவல்லித்தாயாருக்கு காலை 9:00 முதல் 10:30 மணிக்குள்திருக்கல்யாணம் நடக்கிறது.
தொடர்ந்து மார்ச் 24 மாற்றுத்திருக்கோலமும், மறுநாள் காலைஅபிஷேகம், இரவு 7:00 மணிக்கு மேல் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி தாயாருடன் பூப்பல்லக்கில் பட்டணப்பிரவேஷம் வருகிறார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.