தேவகோட்டை கோவில்களில் சிவராத்திரி வழிபாடு
தேவகோட்டை:சிவராத்திரியை முன்னிட்டு தேவகோட்டை நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில், மும்முடிநாதர் கோவில், கலங்காது கண்ட விநாயகர் கோவில், ஆதி சங்கரர் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் நான்கு கால பூஜைகள் நடந்தன. கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
இக்கோவிலில் உள்ள கருப்பருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.தாழையூர் உசிலையுடைய அய்யனார் கூத்தாடி முத்து பெரியநாயகிஅம்மன் கோவிலில் நான்கு கால பூஜைகள் நடந்தன.
சிவராத்திரிக்கு மறுநாளான நேற்று (மார்ச்., 5ல்) சுவாமிக்கும் அம்மனுக்கும், பரிவார சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இறகுசேரி, தாழையூர் கிராமங்களிலிருந்து காவடிகள் எடுத்து வரப்பட்டன. தீமிதித்தல் சாமியாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதமாக பூ வழங்கப்பட்டது.
துடுப்பூர் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நேர்த்திக்கடனாக காவடி எடுத்து வழிபட்டனர். கீரணி தூது ஜெயங்கொண்ட அய்யனார் கோவிலில் சிறப்பு
அபிஷேகம்,சிறப்பு ஆராதனை நடந்தது.அனுமந்தக்குடி, உட்பட சுற்றுப்புற கிராமங் களிலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.