திருவண்ணாமலை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானகொள்ளை விழா
ADDED :2451 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயானகொள்ளை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் உள்ள முலைபால் தீர்த்த குளம் அருகே துர்க்கையம்மன் கோவிலிலிருந்து, மயானகொள்ளை விழாவில் நேர்த்திக்கடன் செலுத்த ஏராளமான பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்தனர். அவர்களின் காலில் விழுந்து வெளிநாட்டினர்கள் வணங்கி சென்றனர்.