உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெப்பத்தில் அருள்பாலித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்

தெப்பத்தில் அருள்பாலித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்

சென்னை: திருவல்லிக்கேணி பெருமாள் கோவிலில், மாசி மாத தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது. தெப்பத்தில், பார்த்தசாரதி பெருமாள் வலம் வந்து,  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவல்லிக்கேணியில் உள்ள, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாதம் தெப்ப உற்சவம், ஏழு நாட்கள், விமரிசையாக நடைபெறும். கைரவீணி குளத்தில், முதல் மூன்று நாட்கள், பார்த்தசாரதி சுவாமியும்; அடுத்த நான்கு நாட்கள் முறையே, நரசிம்மர், ரங்கநாதர், ராமர், கஜேந்திரவரதராஜசுவாமி ஆகியோர், தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிப்பர். இந்த ஆண்டிற்கான, தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது. முதல் நாளான, நேற்று மாலை, 6:30 மணிக்கு, தெப்பத்தில் எழுந்தருளிய, உற்சவ மூர்த்தி பார்த்தசாரதி பெருமாள், கைரவீணி குளத்தில் ஐந்து முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின், உற்சவ மூர்த்தி, மாடவீதிகளை வலம் வந்து, கோவிலை அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !