உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுமன்னார்கோவில் கந்தகுமாரன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா

காட்டுமன்னார்கோவில் கந்தகுமாரன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா

காட்டுமன்னார்கோவில்: கந்தகுமாரன் கிராமத்தில் நடந்த அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை திருவிழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரிக்கரையில் உள்ள கந்தகுமாரன் கிராமத்தில், அங்காளபரமேஸ்வரி கோவில் மயானக் கொள்ளை விழா கடந்த 4ம் தேதி மகா சிவராத்திரி அன்று துவங்கியது.

தொடர்ந்து நேற்று (மார்ச்., 6ல்) மதியம் 2:00 மணிக்கு மயானக்கொள்ளை விழாவையொட்டி, கரகம் எடுத்தல் நிகழ்ச்சி, கோவிலில் இருந்துமயானக்கொள்ளை ஊர்வலம் புறப்பட்டு அருகில் உள்ள சுடுகாட்டை சென்றடைந்தது. அங்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க மயான கொள்ளை உற்சவம் நடந்தது. சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கந்தகுமாரன் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !