சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் அமாவாசை அர்த்தஜாம பூஜை
ADDED :2761 days ago
சிதம்பரம்:சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் நடந்த அமாவாசை அர்த்த ஜாம பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசை அர்த்தஜாம அபிஷேக மண்டலி சார்பில் மாசி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு அர்த்தஜாம பூஜை, மகா அபிஷேகம், விநாயகர் மற்றும் பிரம்ம சாமுண்டி அம்மனுக்கு நெய் தீபம் வழிபாடு, தில்லைக்காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய், பால், தயிர், மற்றும் குளிர்ச்சியான பொருள்கள், பழம், வாசனை திரவியங்கள் போன்ற பொருள்களால் மகா அபிஷேகம் நடந்தது.
தில்லை காளியம்மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டி வேர், விளாமிச்சை வேர், செவ்வரளி பூ அலங்காரத்தில் சிறப்பு அர்த்தஜாம பூஜை, மகா தீபாராதனை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.