அலங்காநல்லூர் ராஜலிங்கேஸ்வரர் கோயில் விழா
ADDED :2753 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் வெள்ளிமலை ராஜ் மீனாம்பிகை சமேத ராஜலிங்கேஸ்வரர் கோயிலில் மாசி திருவிழா நடந்தது.
கருப்பணசாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. சுவாமி புறப்பாடும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராஜ் சித்தர் சுவாமிகள் தலைமையில் விழா குழுவினர்செய்தனர்.