உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை மருந்தீஸ்வரர் கோவிலில் விழா

சென்னை மருந்தீஸ்வரர் கோவிலில் விழா

சென்னை:திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலில், பங்குனி மாதப் பெருவிழா, 9ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருவான்மியூரில் அமைந்துள்ளது, மருந்தீஸ்வரர் கோவில். இங்கு, சிவபெருமான், மருந்தீஸ்வரராகவும்; அம்பாள், திரிபுரசுந்தரியாகவும்; உற்சவராக, தியாகராஜரும் அருள் பாலிக்கின்றனர்.திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற இந்த தலத்தில், ஆண்டுதோறும், பங்குனி மாதப் பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான பங்குனி மாதப் பெருவிழா, 9ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 9ம் தேதி, செல்லியம்மன், சிங்க வாகன உலாவுடன் விழா துவங்குகிறது. 11ம் தேதி இரவு, 10:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.முக்கிய நிகழ்வான, கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம், 19ம் தேதி நடைபெறுகிறது.

20ம் தேதி இரவு கொடியிறக்கத்துடன், வால்மீகி முனிவருக்கு, 18 திருநடனக் காட்சியருளி வீடுபேறு அளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.விழாவின் கடைசிநாளான, 21ம் தேதி, சந்திரசேகர் தெப்பத் திருவிழா, வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, 18 திருநடன காட்சி ஆகியவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !