உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில், கோவில்களில் வரி விலக்கு அதிகாரிகளுக்கு விளக்கம்

சென்னையில், கோவில்களில் வரி விலக்கு அதிகாரிகளுக்கு விளக்கம்

சென்னை:சென்னையில், வருமான வரித்துறை சார்பில், கோவில்களின் வருவாய்க்கு, வரி விலக்கு பெறுதல் தொடர்பான, விளக்க கருத்தரங்கம், அறநிலையத் துறை தலைமையகத் தில், நேற்று (மார்ச்., 6ல்) நடந்தது.

அறநிலையத் துறை கமிஷனர், பணீந்திரரெட்டி தலைமையில் நடந்த கருத்தரங்கில், அதிகாரிகள் கூறியதாவது:கோவில்களின் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். 2.5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள கோவில்கள், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

கோவில்கள், வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதால், 85 சதவீத வரி விலக்கு பெற முடியும். அனைத்து கோவில்களிலும், செப்.,30ம் தேதிக்குள், தணிக்கை கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். எந்த செலவினங்களுக்கும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வழங்க கூடாது. ஒவ்வொரு கோவிலுக்கும், தனித்தனி, இ- - மெயில் முகவரி, பான் எண் கட்டாயம் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !