காஞ்சிபுரம், அஷ்டபுஜ பெருமாள் கோவில் உண்டியலில் ரூ..06 லட்சம் காணிக்கை
ADDED :2452 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், அஷ்டபுஜ பெருமாள் கோவில் உண்டியலில், 2.06 லட்சம் ரூபாயை, பக்தர்கள், காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.இக்கோவிலில், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.அதன்படி, நேற்று (மார்ச்., 6ல்) காலை, கோவிலில் உள்ள நான்கு உண்டியல்கள் திறக்கப்பட்டு, செயல் அலுவலர், கவிதா, தக்கார், தியாகராஜன் மற்றும் பக்தர்கள் முன்னிலையில், காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 2.06 லட்சம் ரூபாய், கோவிலுக்கு வருவாய் கிடைத்தது.