உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கால்கோல் விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கால்கோல் விழா

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை அறிவிக்கும் வண்ணம் கீழமாசி வீதி தேர்முட்டியில் நேற்று கால்கோல் நடும் விழா நடந்தது.

இக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்.,8 காலை 10:05 மணிக்கு மேல் காலை 10:29 மணிக்குள் நடக்கிறது. ஏப்.,15 மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இரவு 8:00 மணிக்கு மேல் இரவு 8:24 மணிக்குள் நடக்கிறது. ஏப்.,16 திக்குவிஜயம், ஏப்.,17 திருக்கல்யாணம் காலை 9:50 மணிக்கு மேல் காலை 10:14 மணிக்குள் நடக்கிறது. ஏப்.,18 காலை 5:45 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. விழாவை முறைப்படி அறிவிக்கும் வண்ணம் கீழமாசிவீதி தேர்முட்டி மண்டபத்தில் கால்கோல் விழா நேற்று ஹாலாஸ் பட்டர் தலைமையில் நடந்தது. இணை கமிஷனர் நடராஜன், பேஸ்கார் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !