/
கோயில்கள் செய்திகள் / மார்ச் 17-ம் தேதி சென்னை வலசரவாக்கத்தில் சங்கராபுரம் ஸ்ரீ மஹா பெரியவா சத்சங்கம்
மார்ச் 17-ம் தேதி சென்னை வலசரவாக்கத்தில் சங்கராபுரம் ஸ்ரீ மஹா பெரியவா சத்சங்கம்
ADDED :2417 days ago
ஸ்ரீ சங்கராபுரம் அக்னிஹோத்ரிகள் குருகுல கிராமம் நடத்தும் அடுத்த சத்சங்கம் வலசரவாக்கம் ஸ்ரீ காமகோடி தியான மண்டபம், காமகோடி நகரில் (ஆஞ்சநேயர் கோவில் பின்புறம்) ஞாயிறு மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறுகிறது.
ஸ்ரீ சங்கராபுரம் மஹாபெரியவா அக்னிஹோத்ரிகள் குருகுல கிராமம், பெரியளவில் உருவாகிக் கொண்டு வரும் ஒரு நூதன வேத கிராமத்தினை பற்றி தகவல் பரிமாற்றம் செய்யும் பொருட்டு ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி கி.வெங்கடசுப்பிரமணியன் வழங்கும் விளக்கஉரை இதில் இடம்பெறும்.
ஆன்மீக அன்பர்கள் அனைவரும் இதில் பங்கு பெறலாம்.மேலும் விபரங்களுக்கு :
கி. வெங்கடசுப்ரமணியன் கைப்பேசி எண் / 9841032959