சென்னையில் மகாருத்ர யாகம் நிறைவு
ADDED :2417 days ago
சென்னை: உலக நன்மைக்காக, சதுர்வேத பாராயணம், மகாருத்ர யாகம், திருவண்ணா மலை,அருணாசலேஸ்வரர் கோவிலில், விமரிசையாக நடந்தது.
திருவெண்காடு சுப்ரமண்ய கனபாடிகள் வேத பாராயண அறக்கட்டளை சார்பில், இந்த ஆண்டு, 81வது சதுர்வேத பாராயணம், மகாருத்ர யாகம், பிப்., 15ம் தேதி, திருவண்ணாமலை, அபிதகுசாம்பா சமேத அருணாசலேஸ்வரர் கோவில், அலங்கார மண்டபத்தில் துவங்கியது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் பங்கேற்றனர். அங்கு நடத்தப்பட்ட யஜுர்வேத தேர்வில், ஒன்பது பேர் தேர்ச்சி பெற்றனர்.அடுத்த பாராயணம், கோவை, பேரூரில்நடக்கும் என, அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்துள்ளார்.