ஒண்டிவீரன் கோவிலில் திருவிழா கோலாகலம்
ADDED :2464 days ago
எலச்சிபாளையம்: கணபில்பாளையம், ஒண்டிவீரன் கோவிலில் நேற்று திருவிழா கோலாகலமாக நடந்தது.
எலச்சிபாளையம் அடுத்த, கணபில்பாளையத்தில் உள்ள ஒண்டிவீரன், முத்துசுவாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு கடந்த, 8ல் இரவு, 7:00 மணிக்கு சங்ககிரி ஒருக்காமலை சென்று புனிததீர்த்தம் மற்றும் பிடிமண் எடுத்து வருதல், கன்னிமாருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. 9ல், காலை கணக்குமடை ஆற்றுக்கு சென்று சக்தி அழைத்து ஒண்டிவீரன் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று, அதிகாலை முத்துசுவாமிக்கு பொங்கல் வைத்து, கிடாவெட்டி பெரும்பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு எலச்சிபாளையம் பஸ்நிறுத்தம் அருகில்உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து, ஒண்டிவீரன் சுவாமி புஷ்ப ரதத்தில் திருவீதிஉலா நடந்தது.