உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் அம்மனுடன் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா இன்று (மார்.,12ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் அம்மனுடன் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழாவானது வரும் 26ம் தேதி வரை 15 நாட்கள் நடக்க உள்ளது. விழாவில் 16ம் தேதி கைப்பாரமும், 20ல் பங்குனி உத்திரமும், 21ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.  24ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !