தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
ADDED :2770 days ago
தாண்டிக்குடி, தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம் மற்றும் கார்த்திகை விழா நடந்தது. விழாவில் அனைத்து காவடி சங்க பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.